மாடிப்படிகளை அமைக்கும் முறை(Up stairs)

மாடிப்படிகளை நமது வசதிக்கு எற்ப வைக்க கூடாது.ஈசானியத்தில் வைத்தால் செல்வ வளர்ச்சியை தடுத்து நிறுத்தி விடும்.

வீட்டிற்கு உள்ளேயோ,வெளியிலோ படிகள் அமைக்கும் போது கிழக்கிலிருந்து மேற்கோ அல்லது வடக்கிலிருந்து தெற்கோ ஏறவேண்டும். அப்படியில்லாமல் மேற்கிலிருந்து கிழக்கோ, தெற்கிலிருந்து வடக்கிற்கோ ஏறும்படி படிகளை அமைக்ககூடாது.

வீட்டிற்கு உள்ளேயோ,வெளியிலோ வளைந்து செல்லும்படி அமைக்கும் போது முதலில் கிழக்கிலிருந்து மேற்கோ அல்லது வடக்கிலிருந்து தெற்கோ ஏறி வளைந்து எப்படியானாலும் ஏறலாம். ஆனால் ஈசானிய அறையில் மட்டும் எக்காரணத்தை கொண்டும் படிகள் அமைக்க கூடாது.

No comments: