கப்போர்ட் அமைக்கும் முறை(Cupboard)

படுக்கை அறையிலோ, ஹாலிலோ கப்போர்ட் வைக்க வேண்டுமெனில் கிழக்கு சுவரில் தெற்கிலிருந்து ஆரம்பித்து வடக்கு சுவருக்கு முழுமையாக இருந்தாலும் தவறில்லை. அல்லது வடக்கு புறம், கிழக்கு ஈசான்யம் காலியாக விடலாம். தெற்குப் புறம் ஆக்கிநேயத்தில் விடக்கூடாது.
அதேபோன்று தெற்குப் புறம் சுவருக்கு கிழக்கில் இருந்து மேற்கு சுவர் வரை போட்டுக்கொள்ளலாம். அல்லது தெற்கு ஆக்கிநேயம் குறைத்து அமைக்கலாம்
ஆனால் தெற்கு நைருதியை மட்டும் விடலாகாது.
வீட்டின் ஈசான்ய அறையில் கிழக்கு வடக்கு சுவர்களுக்கு எம்முறையிலும் அமைக்ககூடாது. ஆனால் சுவரின் அகலதுக்குள்ளே முன்னே வராமல், கிழக்கு வடக்குகளில் அமைக்கலாம்.

No comments: